Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சிக்கிய 3-வது குற்றவாளி…. விமானத்தின் முலம் அழைத்து வந்து…. காவல்துறையினரின் நடவடிக்கை ….!!

ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய 3-வது முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சென்னை தரமணி, வேளச்சேரி போன்ற பகுதிகளில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி, ஏ.டி.எம். மையங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து நூதன முறையில் 45 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் விசாரணை செய்ததில் வடமாநில கொள்ளையர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து தி.நகர் மற்றும் கீழ்ப்பாக்கம் போலீஸ் துணை கமிஷனர்கள் தலைமையில், தனிப்படை தனிப்படை அரியானாவிற்கு விரைந்து சென்று அங்குள்ள காவல்துறையினருடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். அப்போது அமீர் அர்ஷ் மற்றும் வீரேந்திர் ராவத் ஆகிய 2 பேரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணையில் இருகின்றனர். இந்நிலையில் அரியானாவில் பதுங்கி இருந்த 3-வது முக்கிய குற்றவாளியான நஜீம் உசேன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விமானத்தின் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

அதன்பின் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நஜின் உசேனை காவல் வாகனத்தில் பீர்க்கன்கரணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியபோது அந்த பகுதியில் கொள்ளை சம்பவம் எப்படி நடந்தது என்று நடித்துக் காட்டச் செய்தனர். மேலும் அவர்களுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கூட்டாளிகள் யார் என்பதையும் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர். இதனைதொடர்ந்து குற்றவாளி நஜின் உசேனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைப்படுத்துவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |