ரஷ்ய அதிபர் புடின் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும் அந்நாட்டில் ஊரடங்கை அமல்படுத்த அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.
ரஷ்யாவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 21,042 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை அந்நாட்டில் கொரோனாவால் 5,514,599 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 669 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுபாடுகள் மீண்டும் அமலுக்கு வருமா என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஆனால் ரஷ்ய அதிபர் புடின் கொரோனா தடுப்பூசி போடுவதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதால் மீண்டும் ஊரடங்கை விதிக்க அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.