Categories
உலக செய்திகள்

கண்டறியப்பட்ட எலும்புக்கூடு…. 5000 ஆண்டுகளுக்கு முன்னரே உருவான தொற்றுநோய்…. வெளியான ஆராய்ச்சி தகவல்….!!

5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபருக்கு தான் முதல் முதலில் தொற்று நோய் வைரஸ் பாதிப்பு இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1347-ஆம் ஆண்டு முதல் 1351 ஆம் ஆண்டுகளுக்கு இடையேலான காலகட்டத்தில் ஏற்பட்ட பிளேக் நோய் ஐரோப்பாவை நடு நடுங்க வைத்தது.
இந்நிலையில் பிரிட்டன் இணையதளம் ஒன்று இதுக்குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிளேக் நோயால் ஏற்பட்ட உயிரிழப்புகளை  உலகம் இதுவரை சந்தித்ததில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுக்குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபருக்கு இந்த நோய் இருந்தது என்றும் சலக் நதிக்கரையோராத்தில் உள்ள மயானத்தில் கிடைத்த எலும்புகளை ஆய்வு செய்ததன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து எலி, அணில் போன்ற கொறிக்கும் பிராணியின் மூலம் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது இதற்கு பல மருந்துகள் கண்டறியப்பட்டாலும் பாதிப்பு அதிகம் என்பதால் தற்போதும் ஐரோப்பிய மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |