இங்கிலாந்தின் இளவரசர் சார்லஸ் இந்திய நாட்டின் சூரிய ஒளி மின் திட்டங்கள் உலகநாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
பருவநிலை நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய உலகளாவிய மன்றத்தின் விவாதம், நேற்று நடந்துள்ளது. இதில் இங்கிலாந்து இளவரசரான சார்லஸ் பங்கேற்று உரையாற்றியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, இந்திய நாட்டின் உலகளாவிய அணுகுமுறை, வலிமையான தனியார் துறையுடன் எங்களின் முயற்சிகளை துரிதப்படுத்துவதற்கும், நிலையான வருங்காலத்தை அமைப்பதற்கும் முக்கிய வழிகள் சில இருக்கின்றன என்று கருதுகிறேன்.
மாற்றத்தை ஆதரிப்பதற்காக தனியார் மூலதனத்தின் பணிகளை விரைவுபடுத்துவதில் கவனம் வைக்க வேண்டும். இந்தியாவில் சூரிய ஒளி மின் சக்தியானது விரைவாக முன்னேறி வருகிறது. அதன்படி இந்திய நாட்டின் இந்த சூரிய ஒளி மின்சக்தி திட்டங்கள் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்கிறது.
இந்தியா, தொழில்நுட்பத்திலும் புதிய கண்டுபிடிப்புகளிலும் உலகளாவிய மையமாகத் திகழ்கிறது என்று கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் உள்ள தொழில் முனைவோர்களின் திறன் குறித்தும் கூறியிருக்கிறார்.