தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் மின்சார வாகனத்திற்கு 2030ஆம் ஆண்டு வரை மாநில ஜிஎஸ்டி 100% திரும்ப வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க நிலம் வாங்கும்போது 100 சதவீதம் முத்திரைத்தாள் கட்டண விலக்கு அளிக்கப்படும் என்றார். ஏற்கனவே தொழிற்சாலை நிறுவனங்களுக்கு மின்சார வரி விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.