தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு கட்டணம் 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி அரசு ஊழியர்களுக்கான மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யும் தொகை 180 ரூபாயிலிருந்து 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.