பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மினிலாரியை மெயின் ரோட்டில் இழுத்துச் சென்று புதிய பேருந்து நிலையம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் மத்திய அரசை பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பை குறைக்கவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் போராட்டம் நடைபெற்றது.
மேலும் வாழ்வாதாரம் இழந்து வருபவர்களுக்கு 7,500 ரூபாய் நிதி வழங்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் எம். சுந்தரேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் ஆனந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் ஜாபர் சாதிக் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.