குடும்பத்தகராறு காரணமாக மனமுடைந்த இளம்பெண் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராஜாளிப்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார் . இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையில் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த சித்ரா அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனைப் பார்த்ததும் மயங்கிய நிலையில் கிடந்த சித்ராவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண்ணின் தற்கொலை விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.