5-வது டிஎன்பிஎல் டி20 போட்டி ஜூலை 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை போட்டியை நடத்த உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் ஜூலை 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை போட்டியை நடத்த இருப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது .இந்த போட்டியை நடத்த தமிழக அரசின் அனுமதியை பெற்று போட்டி நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது . இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், மதுரை பாந்தர்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த நிலையில் இந்த போட்டிக்கான வீரர்கள் ஒதுக்கீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மொத்தமாக 40 வீரர்கள் அணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கேரளா அணியில் இருந்து தமிழக அணியில் இடம்பெற்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளரான சந்தீப் வாரியர் ,சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரைத் தேர்வு செய்ததன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பந்து வீச்சு தாக்கம் மேலும் வலுவுடன் காணப்படும் என்று அந்த அணியின் கேப்டனான கவுசிக் காந்தி தெரிவித்துள்ளார். தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள சந்தீப் வாரியர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.