நேரடி ஒளிபரப்பில் தலைப்புச் செய்திகளை வாசித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென “இந்த செய்தி நிறுவனம் தங்கள் யாருக்குமே ஊதியத்தை வழங்கவில்லை” என்று நிர்வாகத்தின் மீது குற்றம் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாட்டில் கேபிஎன் என்னும் செய்தி நிறுவனம் உள்ளது. இதில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் கலிமினா வழக்கம்போல நேரடி ஒளிபரப்பில் தலைப்பு செய்திகளை வாசிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் தலைப்புச் செய்திகளை வாசித்துக்கொண்டிருந்த கலிமினா திடீரென ஆடியன்ஸை நோக்கி “இந்த செய்தி நிறுவனம் தங்கள் யாருக்குமே ஊதியத்தை வழங்கவில்லை என்று நிர்வாகத்தின் மீது குற்றம் கூறியுள்ளார்.
இதனையடுத்து கலிமினா இவ்வாறு செய்தி சேனலின் மீது குற்றம் கூறியதை கவனித்த நிறுவனம் உடனடியாக நேரடி ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கேபிஎன் நிர்வாகம் கூறியதாவது, கலிமினா குடித்துவிட்டு செய்தி வாசிக்க சென்றதோடு மட்டுமல்லாமல் இவ்வாறு உளறி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள்.