Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில்…. சரியான விலைக்கு போனது…. மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள்….!!

இந்த ஆண்டு பருத்தி சாகுபடி சரியான விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவாரூரில் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடியான பருத்திகளை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் வியாபாரிகள் ஏலத்தில் விற்று வருகின்றனர். அதன்படி அங்கு நடந்த ஏலத்தில் பருத்திப் பஞ்சுகளை விவசாயிகள் ஏலத்திற்கு வைத்திருந்தனர். இதில் விழுப்புரம், பண்ருட்டி, செம்பனார்கோவில், தேனி, கும்பகோணம் போன்ற வெளிமாவட்ட வியாபாரிகள் கலந்துகொண்டு விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்டு தாங்கள் கேட்கும் தொகையை ஏலச்சீட்டு எழுதி பெட்டியில் போட்டனர்.

இதனையடுத்து விற்பனைக் குழு செயலாளர் தலைமையில், கண்காணிப்பாளர் செந்தில் முருகன் மற்றும் மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர். இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டாலுக்கு 7 ஆயிரத்து 470 ரூபாய் விலையும், குறைந்தபட்சமாக 5 ஆயிரத்து 890 ரூபாய் விலையும் கேட்கப்பட்டிருந்தது. அதன்பின் சராசரியாக பருத்தி குவிண்டால் 6 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் 2,602 விவசாயிகள் கலந்துகொண்டனர். இதில் ஏலத்தில் 2,360 குவிண்டால் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் விற்பனையானது. இவ்வாறு இந்த ஆண்டில் பருத்திக்கு சரியான விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |