அமெரிக்காவில் ஒரு செவிலியர் மருத்துவமனைக்கு வந்த பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதால் கைதாகியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள சாண்டா அனா என்ற நகரில் வசிக்கும் பவுல் மில்லர் என்ற 56 வயதுடைய நபர், தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக உள்ளார். இந்நிலையில் 22 வயது இளம்பெண்ணும் 56 மற்றும் 68 வயதுடைய பெண்களும் மருத்துவமனையில் தங்களிடம் மில்லர் கேவலமாக நடந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து பவுல் மில்லர், நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவரால் மேலும் சில பெண்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள். எனவே இவர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் தங்களிடம் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுள்ளனர்.