Categories
மதுரை மாவட்ட செய்திகள்

6 மாதங்களுக்கு ஒரு முறை… எண்ணப்படும் உண்டியல் காணிக்கை… மகிழ்ச்சி அடைந்த நிர்வாகத்தினர்…!!

ஆண்டாள் கோவிலில் உண்டியலில் 15 லட்சத்து 83 ஆயிரத்து 297 ரூபாய் காணிக்கை இருந்துள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மிகவும் சிறப்பு வாய்ந்த 1000 ஆண்டுகள் பழமையான ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைணவ கோவிலுக்கான சிறப்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் ஆண்டாள் கோவிலில் 6 மாதங்களுக்கு ஒருமுறை உண்டியலை திறந்து காணிக்கைகளை எண்னுவது வழக்கமாக இருந்துள்ளது.

அந்த வகையில் நேற்று ஆண்டாள் கோவிலில் உள்ள உண்டியலை திறந்து அதில் இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் வளாகத்தில் உள்ள ஆண்டாள் கோவில், சக்கரத்தாழ்வார் கோவில், பெரிய ஆழ்வார் கோவில், பெரியபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள உண்டியல்கள் ஆண்டாள் கோவில் மைய மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அதன் பின்னர் கோவில் ஊழியர்கள் நிர்வாக அதிகாரி இளங்கோவன், உதவி ஆணையர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறாக எண்ணப்பட்ட காணிக்கைகள் மொத்தமாக ரூ. 15 லட்சத்து 83 ஆயிரத்து 297 உண்டியலில் இருந்துள்ளது. இதனால் கோவில் நிர்வாகிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |