Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திடீரென கேட்ட சத்தம்… வாயில்லா ஜீவனுக்கு நடந்த சோகம்… மர்ம நபர்களை தேடும் பணி தீவிரம்…!!

நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மணி பசு மாடுகளை கழுவெளி நிலப்பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். இதனையடுத்து அனைத்து மாடுகளும் மேய்ந்து கொண்டிருக்கும் போது திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் மணி அந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது அருகில் இருந்த பசுமாடு ஒன்று சரிந்து விழுந்து இறந்ததை கண்டு மணி அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மணி கோட்டக்குப்பம் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் மர்ம நபர்கள் மான், காட்டுப்பன்றி, முயல் போன்றவற்றை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டை மண்ணில் புதைத்து வைத்திருக்கலாம் எனவும், அந்த வெடிகுண்டை பசுமாடு கடித்த போது அது வெடித்து பசுமாடு இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் வேறு ஏதாவது வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதா என்று காவல்துறையினர் சோதனை செய்ததில் 7 நாட்டு வெடிகுண்டுகள் மண்ணில் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அந்த வெடிகுண்டுகளை பத்திரமாக கைப்பற்றி கிளாம்பாக்கத்தில் உள்ள வெடிமருந்து குடோனில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நாட்டு வெடிகுண்டுகளை புதைத்து வைத்த மர்ம நபர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |