கனடா நாட்டில் அதிக அளவு வெப்பத்தின் காரணமாக 486 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலான மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் அதிகமாக உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் வான்கூவர் உள்ளிட்ட நகரங்களில் வெப்பம் வெளுத்து வாங்குகிறது. மிக அதிகபட்சமாக லைட்டான் நகரத்தில் 121 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. கடும் வெப்பத்தை தாங்க முடியாமல் 134 பேர் கடந்த நான்கு நாட்களில் மட்டும் சுருண்டு விழுந்து உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கனடா மேற்கு பகுதிகளில் கடுமையான வெப்பம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதால் கடந்த 5 நாட்களில் கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதிகளில் 486 மரணங்கள் நிகழ்ந்துள்ளது. வெப்பத்தின் காரணமாக மக்கள் சுருண்டு விழுந்து உயிரிழந்து வருகின்றன. அதில் குறைந்தபட்சம் 300 பேர் வெப்பத்தின் காரணமாக மட்டுமே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் லைட் என்ற பகுதியில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேற அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அனைவரும் குளிர்ச்சியான இடங்களுக்கு இடம் பெறுமாறு மாநில நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.