Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் இரண்டு வாரங்களில்…. அரசு பரபரப்பு உத்தரவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு திமுக ஆட்சி அமைந்த பின்னர் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்கள் உள்ளிட்டவற்றை இரண்டு வாரங்களில் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு மீட்கப்பட்டதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் இயங்கும் குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்கள் உரிய உரிமம் பெற்றுள்ளதா? என்று ஆய்வு மேற்கொண்டு 2 வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஆட்சியர்கள், அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |