இன்றைய தின நிகழ்வுகள்
936 – கிழக்கு பிரான்சியாவின் (இன்றைய செருமனி) மன்னர் என்றி இறந்தார். இவரது மகன் முதலாம் ஒட்டோ புதிய மன்னராக முடிசூடினார்.
1698 – தோமசு சேவரி முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.
1776 – அமெரிக்கப் புரட்சி: பெரிய பிரித்தானியாவுடனான தொடர்புகளைத் துண்டிக்கும் தீர்மானத்தை அமெரிக்க சட்டமன்றம் எடுத்தது. ஆனாலும் இறுதி விடுதலைச் சாற்றுரை சூலை 4 இலேயே வெளியிடப்பட்டது.
1822 – அடிமைகளுக்கிடையே கிளர்ச்சியைத் தூண்டிய குற்றங்களுக்காக அமெரிக்காவின் தென் கரொலைனா மாநிலத்தில் 35 அடிமைகள் தூக்கிலிடப்பட்டனர்.
1823 – பிரேசிலில் போர்த்துக்கேயரின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
1839 – கியூபாக் கரையோரத்தில் இருந்து 20 மைல் தூரத்தில் 53 ஆப்பிரிக்க அடிமைகள் அர்மிஸ்டாட் என்ற அடிமைக் கப்பலைக் கைப்பற்றினர்.
1853 – உருசியா துருக்கியின் மீது படையெடுத்தது. கிரிமியப் போர் ஆரம்பமானது.
1871 – இத்தாலியப் பேரரசர் இரண்டாம் விக்டர் இம்மானுவேல் திருத்தந்தை நாடுகளிடம் இருந்து தான் கைப்பற்றிய ரோம் நகரை அடைந்தார்.
1881 – அமெரிக்க அரசுத்தலைவர் சேம்சு கார்ஃபீல்டு சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். இவர் செப்டம்பர் 19 இல் மரணமானார்.
1897 – பிரித்தானிய-இத்தாலியப் பொறியாளர் மார்க்கோனி வானொலிக்கான காப்புரிமத்தை இலண்டனில் பெற்றார்.
1921 – முதலாம் உலகப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் வாரன் ஜி. ஹார்டிங் செருமனியுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
1934 – செருமனியில் நீள் கத்திகளுடைய இரவுப் படுகொலைகள் முடிவுக்கு வந்தது.
1937 – அமேலியா ஏர்ஃகாட் மற்றும் பிரெட் நூனன் ஆகியோர் வானூர்தியில் உலகைச் சுற்றும் முயற்சியில் அமைதிப் பெருங்கடல் பகுதியில் காணாமல் போயினர்.
1940 – அரண்டோரா இசுட்டார் என்ற பிரித்தானியக் கப்பல் செருமனியின் யூ-47 நீர்மூழ்கியினால் அத்திலாந்திக்குப் பெருங்கடலில் மூழ்கடிக்கப்பட்டதில் 800 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர்.
1940 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுபாஸ் சந்திர போஸ் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.
1962 – முதலாவது வோல் மார்ட் அங்காடி ஆர்கன்சா மாநிலத்தில் திறக்கப்பட்டது.
1966 – பிரெஞ்சு இராணுவத்தினர் பசிபிக் பெருங்கடலில் தமது முதலாவது அணுவாயுதச் சோதனையை நிகழ்த்தினர்.
1976 – வியட்நாம் குடியரசின் வீழ்ச்சியை அடுத்து 1954 முதல் பிரிந்திருந்த கம்யூனிச வடக்கு வியட்நாம் தெற்கு வியட்நாமுடன் வியட்நாம் சோசலிசக் குடியரசு என்ற பெயரில் இணைந்தது.
1986 – சிலியின் இராணுவ ஆட்சியாளர் அகஸ்தோ பினோசெட்டுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது இருவர் உயிருடன் எரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
1997 – ஆசிய நிதி நெருக்கடி ஆரம்பமானது.
2002 – உலகத்தை பலூனில் தனியே இடைவேளை விடாது பறந்த முதல் மனிதர் என்ற சாதனையை ஸ்டீவ் பொசெட் பெற்றார்.
2004 – ஆசியான் அமைப்பில் பாக்கித்தான் இணைந்தது.
2010 – காங்கோவில் எண்ணெய் நிரப்பிய பாரவுந்து ஒன்று வெடிதத்தில் 230 பேர் உயிரிழந்தனர்.
2013 – உலகளாவிய வானியல் ஒன்றியம் புளூட்டோவின் நான்காம், ஐந்தாம் சந்திரன்களுக்கு கெர்பரோசு, ஸ்டிக்சு எனப் பெயரிட்டது.
2013 – 6.1 அளவு நிலநடுக்கம் இந்தோனேசியாவின் அச்சே பகுதியில் இடம்பெற்றதில் 42 பேர் உயிரிழந்தனர், 420 பேர் காயமடைந்தனர்.
2016 – பக்தாதில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 341 பேர் உயிரிழந்தனர்.
இன்றைய தின பிறப்புகள்
1862 – வில்லியம் ஹென்றி பிராக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1942)
1877 – ஹேர்மன் ஹெசே, நோபல் பரிசு பெற்ற செருமன்-சுவிசு எழுத்தாளர் (இ. 1962)
1902 – க. கணபதிப்பிள்ளை, இலங்கைத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 1968)
1903 – அலெக் டக்ளஸ் – ஹோம், பிரித்தானியாவின் 66வது பிரதமர் (இ. 1995)
1906 – அன்சு பேத்து, நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2005)
1910 – டி. வி. தாமஸ், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 1977)
1923 – விஸ்லவா சிம்போர்ஸ்கா, நோபல் பரிசு பெற்ற போலந்துக் கவிஞர் (இ. 2012)
1925 – பத்திரிசு லுமும்பா, கொங்கோவின் 1வது அரசுத்தலைவர் (இ. 1961)
1929 – இமெல்டா மார்க்கோஸ், பிலிப்பீன்சின் 10வது முதல் பெண்மணி
1930 – ஒ. வே. விஜயன், மலையாள எழுத்தாளர் (இ. 2005)
1938 – சி. கே. என். பட்டேல், இந்திய-அமெரிக்கப் பொறியியலாளர், இயற்பியலாளர்
1940 – எம். ஏ. குலசீலநாதன், ஈழத்து கருநாடக, மெல்லிசைப் பாடகர், வானொலிக் கலைஞர் (இ. 2004)
1941 – சி. ஜெயபாரதி, மலேசியத் தமிழறிஞர் (இ. 2015)
1942 – வீ. மாரியப்பன், மலேசிய எழுத்தாளர்
1946 – சே. மாணிக்கம், தமிழக எழுத்தாளர்
1946 – ரிச்சார்ட் ஆக்செல், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர்
1947 – வீ. கு. சந்திரசேகரன், மலேசிய எழுத்தாளர்
1949 – இராசமனோகரி புலேந்திரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 2014)
1957 – பிரெட் ஹார்ட், கனடிய மற்போர் வீரர்
1958 – மயில்சாமி அண்ணாதுரை, தமிழகப் பொறியலாளர், விண்வெளி ஆய்வாளர்
1965 – கௌதமி, தென்னிந்திய நடிகை
1986 – லின்சி லோகன், அமெரிக்க நடிகை
1990 – மார்கோட் ரொப்பி, ஆத்திரேலிய நடிகை
இன்றைய தின இறப்புகள்
1591 – வின்செஞ்சோ கலிலீ, இத்தாலிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (பி. 1520)
1621 – தாமசு ஃஆரியட், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1560)
1757 – சிராச் உத் தவ்லா, வங்காளத்தின் கடைசி நவாப் (பி. 1733)
1778 – இழான் இழாக்கு உரூசோ, சுவிட்சர்லாந்து மெய்யியலாளர், இசையமைப்பாளர் (பி. 1712)
1843 – சாமுவேல் ஹானிமன், செருமன் மருத்துவர் (பி. 1755)
1949 – கியார்கி திமித்ரோவ், பல்கேரிய அரசியல்வாதி (பி. 1882)
1961 – ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1899)
1963 – சேத் பார்னசு நிக்கல்சன், அமெரிக்க வானியலாளர் (பி. 1891)
1977 – விளாடிமிர் நபோக்கோவ், உருசிய எழுத்தாளர் (பி. 1899)
1988 – வைபர்த் தவுகிளாசு, கனடிய வானியலாளர் (பி. 1894)
1992 – காமரோன் தே லா ஈஸ்லா, எசுப்பானியப் பாடகர் (பி. 1950)
1997 – ஜேம்ஸ் ஸ்டுவர்ட், அமெரிக்க நடிகர் (பி. 1908)
2013 – டக்லஸ் எங்கல்பர்ட், கணினிச் சுட்டியைக் கண்டுபிடித்தவர் (பி. 1925)
2016 – எலீ வீசல், இனவழிப்பில் இருந்து தப்பியவர், செயற்பாட்டாளர் (பி. 1928)