கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக பாதுகாக்க பிரிட்டனில் 3-வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பிரிட்டனில் வருகிற செப்டம்பர் மாதம் முதல் 3-வது டோஸ் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு புதிய சுகாதார துறை அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘பிரிட்டனில் பூஸ்டர் என்ற 3-வது டோஸ் தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் போடப்பட உள்ளது. இந்த தடுப்பூசியால் 6 மாதங்களில் தொற்று பாதிப்பு சரியத் தொடங்கும் என்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளதால் வரும் செப்டம்பர் முதல் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படள்ளது.
இதில் முதற்கட்டமாக 70 வயதுக்கு மேற்பட்டோர் , முன் களப்பணியாளர்கள் ஆகியோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்னுரிமை வழங்கப்படும் என்றும், 50 வயது உட்பட்டவர்களுக்கு 2 -வது கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படும்’ என்று அவர் கூறினார் .மேலும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்வதால் மட்டும் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியாது என்றும், 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலமாக தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.இதனால் வருகிற செப்டம்பர் மாதம் முதல் பூஸ்டர் தடுப்பூசியை பொதுமக்கள் செலுத்திக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார் .