ராமநாதபுரம் மாவட்டத்தில் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் கொல்லூர் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பேருந்து வசதி இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு 100 முதல் 150 ரூபாய் குடுத்து ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி கல்லூரி மாணவர்களும் கொல்லூரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காமன்கோட்டை பகுதிக்கு நடந்து சென்று பேருந்தில் செல்கின்றனர்.
மேலும் வெளியூரில் இருந்து ஊருக்கு செல்பவர்களுக்கு இரவு நேரங்களில் செல்ல முயாமலும் தவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சியிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளாத நிலை உள்ளதால் பேருந்து வசதி வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.