Categories
சினிமா தமிழ் சினிமா

‘தப்பு பண்ணிட்டேன்’… டுவிட்டரில் யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட அறிவிப்பு…!!!

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள புதிய ஆல்பம் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவும் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் நெருங்கிய நண்பர்கள். நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன், சிலம்பாட்டம், வல்லவன், வானம் ஆகிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா தனது புதிய ஆல்பம் பாடல் குறித்த அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். ‘தப்பு பண்ணிட்டேன்’ என்கிற இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்த பாடலில் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் இருவரும் நடித்துள்ளனர். மேலும் இந்த பாடலுக்கு பிரபல நடன இயக்குனர் சாண்டி நடனம் அமைத்துள்ளார். விரைவில் இந்த பாடலின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Categories

Tech |