ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் 14 வகையான கொரோனா நிவாரண பொருட்கள் எம்.எல்.ஏ முருகேசன் தலைமையில் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா 2ஆம் ஆலையில் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட வாழ்விற்கு தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு என 14 வகையான கொரோனா நிவாரண பொருள்களை வழங்கி வருகின்றது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் உள்ள வாகவயல் கிராமத்தில் நேற்று அப்பகுதியில் உள்ள கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு எம்.எல்.ஏ முருகேசன் தலைமை தங்கியுள்ளார். மேலும் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் அண்ணாமலை, வாகவயல் ஊராட்சி தலைவர் பஞ்சவர்ணம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜா உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர். முக்கியமாக நிவாரண பொருட்கள் வாங்க வந்த பொது மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வாங்கி சென்றுள்ளனர்.