70 வருடங்களாக போராடி மலேரியா காய்ச்சல் நோயை முற்றிலுமாக ஒழித்துள்ள சீனாவை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் பாராட்டியுள்ளார் .
உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சீனா வெளியிட்ட அறிவிப்பு ஒன்று உலக நாடுகளிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் கடந்த 1940 ஆம் ஆண்டிலிருந்து சீனாவில் பாதிப்பை ஏற்படுத்திய மலேரியா காய்ச்சலால் ஆண்டுக்கு சுமார் 3 கோடி பேருக்கு மேல் பாதிப்புக்கு ஆளாகினர். இந்நிலையில் கடந்த 4 வருடங்களில் அங்கு ஒருவருக்குக் கூட மலேரியா காய்ச்சல் நோய் ஏற்படாமல் அந்நாடு சாதித்து காட்டியுள்ளது . இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் கூறுகையில், மலேரியா காய்ச்சல் நோயிலிருந்து மீண்டுள்ள சீனாவுக்கு வாழ்த்துக்கள். இந்த கடின உழைப்பே வெற்றிக்கு கிடைத்த பலனாகும்.
மேலும் மிகத்துல்லியமான நடவடிக்கையை மேற்கொண்டதால் சீனாவால் இதை சாதிக்க முடிந்தது. இதன் மூலமாக மலேரியா நோய் இல்லாத நிலையை உருவாக்க முடியும் என்று சீனா மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது ‘என்று அவர் கூறினார். மேலும் கடந்த 1950-ம் ஆண்டுகளில் இருந்து இந்த மலேரியா நோய்க்கு எதிராக கொசு ஒழிப்பு திட்டத்தின் மூலமாக தீவிரமாக செயல்பட்டு வந்தது.அத்துடன் வீடு வீடாகச் சென்று கொசு மருந்து அடிப்பது போன்றவற்றை தீவிரமாக கடைபிடித்து வந்ததால் இந்த மலேரியா நோயை வெற்றிகரமாக ஒழித்துவிட்டது . இதற்கு முன்பாக எல் சால்வடார் , பராகுவா, அல்ஜீரியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் அர்ஜெண்டீனாஆகிய நாடுகள் மலேரியா நோயை முற்றிலுமமாக ஒழித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது .