பிரித்தானியாவில் சிறிய ரக விமானம் ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள Goodwood விமான தளத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த தளத்தின் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து Sussex காவல்துறையினர் அந்த சம்பவத்தில் 65 மற்றும் 58 வயதுடைய இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும் விமான விபத்து விசாரணை பிரிவு ( AAIB ) இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளது. இதற்கிடையே மீட்புத்துறை மற்றும் Sussex தீயணைப்பு அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.