தமிழகத்தில் 2019 ஜனவரி 22 முதல் 30-ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், பணியாளர்கள் விவரங்களை அளிக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டிருந்தது. ஆசிரியர்கள், பணியாளர்கள் மீதான துறை ரீதியான நடவடிக்கையை வாபஸ் பெற ஏதுவாக விவரங்கள் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என்றும் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் எனவும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.