Categories
தேனி மாவட்ட செய்திகள்

மீன்களை வைகை அணையில் விட்ட… மாவட்ட ஆட்சியர்… பூச்சிக்கொல்லி ஆய்வகத்தையும் நேரில் சென்று ஆய்வு…!!

தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாநில பூச்சிக்கொல்லி ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை பகுதியில் வேளாண்மை துறை சார்பில் செயல்பட்டு வரும் மாநில பூச்சிக்கொல்லி ஆய்வகம் மற்றும் குறியீட்டு மையத்தை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள தனியார் பூச்சிமருந்து விற்பனை நிலையத்தில் இருந்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தரமாக உள்ளதா என கேட்டறிந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அரசு மீன் விதைப் பண்ணையில் ஆய்வு செய்த ஆட்சியர் அங்கு உற்பத்தி செய்த மீன் குஞ்சுகளை வைகை அணையில் விடுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வில் வேளாண்மை இணை இயக்குனர் அழகு நாகேந்திரன், தோட்டக்கலை துணை இயக்குனர் பாண்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஷ்ணுராம் மேத்தி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |