சாலையில் வேகமாக செல்கின்ற நான்கு சக்கர வாகன ஓட்டுனர்களை கண்டறிய ஸ்பீட் ரேடார் கன் கருவி அமைத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்படும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக இ-சலான் முறை தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் இம்மாவட்டத்தில் அமைந்திருக்கும் சாலைகளில் விதிகளை மீறி சென்ற வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பதற்கு ஸ்பீடு ரேடார் கன் கருவி மூலமாக வாகனங்களின் வேகத்தின் அளவை கண்காணிக்கும் பணியை போக்குவரத்து அலுவலகம் சார்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சாலை ஓரங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்த பகுதிகளின் வழியாக அதிக வேகத்தில் செல்கின்ற வாகனங்கள் கண்டறியப்பட்டு வருகின்றது. இதுபற்றி சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை அடுத்து போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி அதிவேகத்தில் செல்கின்ற வாகனங்களை ஸ்பீட் ரேடார் கருவி மூலமாக கண்டறிந்து வாகன எண்ணை பதிவு செய்தால் அந்த வாகனத்தின் உடைய பதிவு எண் மற்றும் சேஸ் எண் போன்ற அனைத்து தகவல்களையும் கண்டறிய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் வாகன ஓட்டுநர்களின் உரிமம் பெற்றவரின் முகவரி மற்றும் பெயர் போன்ற பல தகவல்களை கண்டறியப்பட முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின் இக்கருவியின் மூலம் வாகன பதிவு எண்களை மாற்றி அமைத்து வாகனங்களை ஓட்டிச் செல்பவர்களை எளிதான முறையில் கண்டுபிடிக்க முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் விதிமுறைகளை மீறும் செயல்களில் ஈடுபடும் நபர்களை இ-சலான் மூலமாக அபராதம் விதித்து அவை அவர்களின் தொலைபேசிக்கு எஸ்.எம்.எஸ் மூலமாக தகவல் சென்றடையும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதனைப் பார்த்த பின்பு சம்பந்தப்பட்டவர்கள் அபராதத்தை உடனே செலுத்த வேண்டும் என அலுவலக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர்கள் சாலை வரி மற்றும் எஃப்.சி ஆகியவற்றை செலுத்த முடியாது எனவும் அதனால் வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை முறைப்படி பின்பற்றி அபராதம் ஏற்படாதவாறு தவிர்த்து செயல்பட வேண்டும். மேலும் சாலை பகுதிகளில் சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அரசு நியமித்திருந்த குறிப்பிட்ட வேகத்தை விட அதிவேகமாக சென்றுகொண்டிருந்த 15 வாகனங்களை கண்டுபிடித்து வாகனம் ஒன்றிற்கு 1, 200 ரூபாய் விதத்தில் மொத்தமாக 18 ,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.