மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கரையாம்பாடி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வேடியப்பன் என்பவர் எலத்தூர் கிராமத்தில் உள்ள செய்யாறு ஆற்றுப்படுகையில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கலசப்பாக்கம் போலீசார் அவரை கைது செய்தனர். அதேபோல கோனையூர் கிராமத்தைச் சேர்ந்த நாகவேல் என்பவர் அப்பகுதியில் உள்ள செய்யாறு ஆற்றுப்படுகையில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக சேத்துப்பட்டு போலீசார் அவரை கைது செய்தனர்.
இவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தியதில் தொடர்ந்து சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி மாவட்ட ஆட்சியர் முருகேஷ்-யிடம் பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின் படி இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.