இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனுமதி அளித்துள்ளது.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதில் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்நிலையில் இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட பயணிகள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தெரிவித்திருந்தது .
இதனால் இந்திய தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கும் வரை ஐரோப்பிய ஒன்றிய தடுப்பூசிக்களுக்கான சான்றிதழை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்தியா எச்சரித்தது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான ஆஸ்திரியா ,ஜெர்மனி ,ஸ்பெயின் உட்பட 7 நாடுகள் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் இன்றி நாட்டிற்குள் வருவதற்கு அனுமதி அளித்துள்ளது.