தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளில் செல்போன்களுக்கு ஓடிபி அனுப்பப்படுகிறது. இந்த ஓடிபி எண்ணை இனி பயனாளர்கள் அளிக்க தேவையில்லை. 24 மணி நேரத்தில் அதுவே தானாக அழிந்து விடும் தொழில் நுட்பத்தை கூகுள் அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் இது அமலுக்கு வரும். இதற்கு கூகுள் வழங்கும் செட்டிங்ஸ் வசதியை ஆக்டிவேட் செய்ய வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.