தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது.
இந்நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவியதால் கடந்த ஓரிரு நாட்களாக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் மதுரை எய்ம்ஸ் அறிவிக்கப்பட்ட இதுவரை சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. அடிக்கல் நாட்டப்பட்டு 45 நாட்களில் முடிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.