இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை வைரஸ் உலகை ஆதிக்கம் செலுத்தும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. எளிதாக பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா தற்பொழுது 96 நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. டெல்டா வகை வைரஸ் விரைவில் உலகம் முழுவதும் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உருமாற்றம் அடைந்த டெல்பிளஸ் வகை வைரஸ் வேகமாக பரவும், அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதற்கு போதுமான தரவுகள் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். மேலும் முக கவசம் அணிவது தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது போன்ற தடுப்பு முறைகளை தொடர்ந்து பின்பற்றி னால் வைரஸிடம் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்