Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நாட்டிலேயே நீலகிரிக்கு முதலிடம்…. மிகப்பெரிய சாதனை….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நாட்டிலேயே 100 சதவிகித பழங்குடியினருக்கு தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற சாதனையை நீலகிரி மாவட்டம் படைத்துள்ளது. இந்த மாவட்டத்தில் வசிக்கும் 27,032 பழங்குடியினரில் தகுதி வாய்ந்த 21,600 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |