Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பு?…. அதிரடி….!!!?

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விவரங்களை தமிழக அரசு வெளியிட்டது. மேலும் பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண்கள் ஜூலை 31க்குள் வெளியாகிவிடும் என்றும் ஆகஸ்ட்- 1க்கு பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் படிப்படியாக பள்ளிகளை திறந்து முதலில் 10 முதல் 12 ஆம் வகுப்புகளை தொடங்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகளைத் திறக்கலாம் என கூறியதாக தெரியவந்துள்ளது. அதனால் ஜூலை இறுதிக்குள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |