Categories
ஆன்மிகம்

உங்கள் வீட்டின் முன்பு…. இந்த செடியை வளர்க்காதீங்க…. பிரச்சினை வந்து சேருமாம்…!!!

மரங்கள் செடி கொடிகள் என்று வீட்டில் வளர்ப்பது வாஸ்து தோஷத்தை நீக்கும் என்பது உண்மை. நம்முடைய வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் பசுமையான மரங்களையும் செடிகளையும் வளர்த்துக் கொண்டாலே போதும் தோஷங்களும் நீங்கிவிடும். இதற்காக மரம், செடி, கொடிகளில் எங்கு வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வளர்த்து விடக்கூடாது. இதனாலும் சில தோஷங்கள் ஏற்படும். அந்த வகையில் வீட்டின் முன்பக்கம் அரளி செடியை கட்டாயம் வளர்க்க கூடாது. ஏன் வளர்க்க கூடாது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

அரளி செடியை கட்டாயம் வீட்டின் முன்பு வளர்க்கக்கூடாது. இந்த செடி தெய்வீக குணங்களை கொண்டது அல்ல. அரளி செடி தோஷ நிவர்த்திக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூஜைகளுக்கும் அர்ச்சனைகக்குளும் அரளிப்பூவை பயன்படுத்தினாலும் வீட்டின் முன்னால் வளர்ப்பது நல்லது கிடையாது. வீட்டின் பின்புறம் போன்ற பகுதிகளில் வளர்க்கலாம். வீட்டின் முன்னால் அரளிச்செடி வளர்ப்பவர்களுக்கு அக்கம்பக்கத்தினர் உடைய ஆதரவும் நட்பும் பிரச்சினையாகவே இருக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

எவ்வளவுதான் ஒற்றுமையாக சேர்ந்து வாழ நினைத்தாலும் இந்த செடியின் அதிர்வலைகள் ஒற்றுமையை  சீர்குலைக்கும் வண்ணம் இருக்கும். வாசனை மிக்க மலர்களை அதாவது தெய்வீக குணங்களும் உடைய செடிகளை வீட்டிற்கு முன்னால் வளர்த்து வந்தால் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும் என்பார்கள். துளசி செடி வளர்க்கலாம். அதேபோல் மருதாணி செடியும் வளர்க்கலாம். இது மகா லட்சுமிக்கு இணையாக பார்க்கப்படுகிறது. அதேபோல அரளி, வெற்றிலை, முருங்கை போன்றவற்றை வீட்டிற்கு பின்புறம் வளர்ப்பதுதான் நல்லது. கள்ளிச்செடி கட்டாயம் வீட்ட்டில் வளர்க்கவே கூடாது. வளர்த்தால் வீட்டில் துரதிஷ்டம் வந்து சேரும்.

Categories

Tech |