Categories
உலக செய்திகள்

எந்த நாட்டவரும் எங்களை அடிமைப்படுத்த முடியாது…. அடக்க நினைப்பவர்களை இவ்வாறு எதிர்கொள்வோம்- சீனஅதிபர் ஜி ஜின்பிங்….!!

சீன அதிபர் ஜின்பிங் தனது கட்சியின் நூற்றாண்டு விழாவில் சீன நாட்டின் சிறப்பு குறித்தும் எதிர்கால நம்பிக்கை குறித்தும் உரையாற்றினார்.

சீனாவின் தியானன்மென் கேட் சதுக்கத்தில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு கட்சியின் தலைவரும், அந்நாட்டு அதிபருமான ஜி ஜின்பிங் தலைமை வகித்தார். அதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அதிபர் ஜி ஜின்பிங் சீனாவை எந்த நாட்டவரும் அடிமைப்படுத்த முடியாது என்றும் அவ்வாறு அடிமைப்படுத்த நினைப்பவர்களை 140 கோடி மக்கள் தங்களின் இரும்புக் கரங்களால் எதிர்கொள்வார்கள் எனக் கூறினார்.

மேலும் சீனாவும் எந்த நாட்டையும் அடிமைப்படுத்த நினைத்ததும் இல்லை இனிமேல் நினைக்க போவதும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் சீனா தங்களின் உரிமையை நிலைநாட்டி தைவானை தங்களின் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என்றும் சீனா எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறது எனவும் கூறினார்.

Categories

Tech |