மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம்- ஜெயந்தி என்ற தம்பதியினர் சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம் அருகில் இந்த தம்பதியினர் சென்று கொண்டிருக்கும்போது ஏதோ அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஜெயந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த ஆறுமுகத்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் ஜெயந்தியின் சடலத்தைக் காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரகாந்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனையடுத்து அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.