நாமக்கல் மாவட்டத்தில் சாலையோரத்தில் நின்ற முதியவர் மீது ஆம்னி வேன் மோதி சம்பவ இடத்தியிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அடுத்துள்ள மாமரத்து பட்டியில் சின்னசாமி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வலையபட்டி சாலையில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் மொபட்டிற்கு டயர் மாற்றுவதற்காக நிறுத்திவிட்டு சாலையோரம் நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த ஒரு ஆம்னி வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற சின்னசாமி மீது மோதியுள்ளது. இதில் சின்னசாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து ஆம்னி வேனை ஓட்டி வந்த வளையப்பட்டியை சேர்ந்த சதீஷ்(27) இருந்த ஆண்டாபுரத்தை சேர்ந்த கார்த்திக்(21) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக 2 இளைஞர்களையும் மீட்டு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து தகவலறிந்து வந்த போலீசார் சின்னசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சின்னசாமியின் மனைவி நாச்சம்மாள்(61) அளித்த போகரின் அடிப்படையில் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.