Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதை போட்டு கொண்டதால் தான்… இளம் பெண்ணிற்கு நடந்த விபரீதம்… பொது மக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

இளம் பெண் உயிரிழந்ததால் அவரின் உறவினர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள சிவசைலம் பகுதியில் கூலித் தொழிலாளியான இசக்கி பாண்டியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மகேந்திர வள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தேசிய ஊரக திட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு விஜி மற்றும் நந்தினி என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 25ஆம் தேதி அப்பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது.  அந்த முகாமிற்கு மகேந்திர வள்ளி சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் மகேந்திர வள்ளிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு மகேந்திரவள்ளிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதனால் மகேந்திரவள்ளியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இணைந்து அப்பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் சுப்பையன், அரசு தலைமை மருத்துவர் பழனிகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னிவளவன் மற்றும் பல அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கள் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

அந்த முகாமிற்கு வந்தவர்கள் மகேந்திரவள்ளியிடம்  கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால் தான் தேசிய ஊரக திட்டத்தில் வேலை செய்ய முடியும் என்று கூறியதால் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அதனால்தான் மகேந்திர வள்ளிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார் எனவும்  அவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். அதற்கு அதிகாரிகள் இறந்த மகேந்திர வள்ளியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்கிருந்து  அமைதியாக கலைந்து சென்றனர்.

Categories

Tech |