Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS SA : அதிரடி காட்டிய பொல்லார்ட் …. தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி ….!!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான  4-வது  டி20 போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது .

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தென் ஆப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.  இரு அணிகளுக்கு இடையேயான 4-வது  டி20 போட்டி நேற்று  செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் வெஸ்ட் இண்டியன்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 167 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சிம்மன்ஸ் 47 ரன்களும் ,கேப்டன் பொல்லார்ட்  25 பந்துகளில் 5 சிக்சர், 2 பவுண்டரிகளை  அடித்து விளாசி                  51 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்பிறகு  களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 168 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. ஆனால் இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்து தோல்வியை சந்தித்தது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய டி காக் இறுதி வரை போராடி 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. இதன் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-2 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை உள்ளது. இந்தப் போட்டியில் ஆட்ட நாயகனுக்கான விருது கேப்டன் பொல்லார்டுக்கு அளிக்கப்பட்டது.

Categories

Tech |