Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டான்” சிக்கிய குற்றவாளிகள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் பிரபல ரவுடியை 2 பேர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கழுகொண்டபள்ளி பகுதியில் மஞ்சுநாத் என்ற ரவுடி வசித்து வந்துள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் மஞ்சுநாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சந்தீப், சேத்தன் என்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது அதே பகுதியில் வசிக்கும் இந்த வாலிபர்கள் 2 பேரிடமும் மஞ்சுநாத் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த இரண்டு வாலிபர்களும் மஞ்சுநாத்தின் கண்ணில் மிளகாய் பொடி தூவி கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக மஞ்சுநாத்தின் உடலை அவர்கள் இருவரும் அங்குள்ள இரும்பு குடோனுக்கு பின்புறம் இருக்கும் ஏரியில் புதைத்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |