Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கெல்லாம் வேற லெவல்.. ”ஆக்ஷனில் இறங்கிய EPS” கதி கலங்கும் ஸ்டாலின்….!!

பேரறிஞ்சர் அண்ணா பிறந்த நாளுக்கு அதிமுக 5 மாநிலங்களில் பொதுக்கூட்டம் நடத்துவது திமுகவை கதி கலங்கச் செய்துள்ளது.

செப்டம்பர் 15_ஆம் தேதி அறிஞ்சர் அண்ணாவின் பிறந்தநாள் நாள் விழா கொண்டாடப்பட இருக்கின்றது. அண்ணாவின் பிறந்த நாளை மிக சிறப்பாக நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. இது குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 15ம் தேதி முதல் 17-ம் தேதி வரை பொதுக் கூட்டங்கள் நடைபெறும்.15ஆம் விருக்கபக்கத்தில்  நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் , சோழிங்கநல்லூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் உரை ஆற்றுகின்றனர்.

அதே போல அந்த அறிக்கையில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் தமிழகம் , புதுச்சேரி , கர்நாடகா , ஆந்திரா , கேரளா , டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என்றும் அதிமுக அறிவித்துள்ளது அனைவரையும் திகைப்படைய வைத்துள்ளது. ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் மட்டும் பொதுக்கூட்டம் நடத்தி வந்த அதிமுக இந்த முறை தலைநகர் டெல்லி உட்பட 5 மாநிலத்தில் நடத்துகின்றது.

சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திமுக டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம் இந்திய அரசியல் கட்சிகளை பிரமிக்க வைத்தது. தேசிய கட்சிகளே முன்னெடுக்காத ஒரு விஷயத்தை மாநில கட்சியான திமுக எடுத்ததே அந்த பிரமிப்புக்க்கு காரணம். இதை கணக்கிலெடுத்து தான் தற்போது அதிமுக அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தை 5 மாநிலங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது.

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து திமுக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. ஆனால் தமிழக முதல்வர் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார்.இதனால் அரண்டு போய் இருக்கும் திமுகவிற்கு எடப்பாடி அடுத்த அடி கொடுத்தது தான் இந்த பொதுக்கூட்டம்.யாருக்கும் நங்கள் சாலைத்தவர்கள் அல்ல என்று அதிமுக திமுகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து வருகின்றது.

Categories

Tech |