Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடித்துவிட்டு தகாத வார்த்தை…. தள்ளிவிட்ட வாலிபர்…. குடுபத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்த டெம்போ டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பயணம் பகுதியில் சார்லஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெம்போ டிரைவராக இருந்துள்ளார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் சார்லசுக்கு மது பழக்கம் இருப்பதனால் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு போதையில் பயணம் சந்திப்பு பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு சார்லஸ் சாலையோரம் நின்று கொண்டு போதையில் தகாத வார்த்தைகளை பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வர்க்கீஸ் என்ற தொழிலாளி நின்று கொண்டிருந்தார்.

எனவே சார்லஸ் தன்னை தான் திட்டுவதாக வர்க்கீஸ் எண்ணி அவரை காலால் எட்டி உதைத்து சாலையில் தள்ளியுள்ளார். இதனால் சார்லஸ் சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் முன்பு விழுந்துள்ளார். இதனையடுத்து மோட்டார் சைக்கிள் சார்லஸ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த சார்லசை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சார்லஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து மனைவி ராஜகுமாரி கொடுத்த புகாரின்படி மார்த்தாண்டம் காவல்துறையினர் வர்க்கீஸ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Categories

Tech |