பேசி கொண்டிருந்த போது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் குருசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான நம்பிராஜன் என்ற மகன் இருக்கின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நம்பிராஜனுக்கும் அவரது உறவினரான 17 வயதுடைய சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நம்பிராஜன் அந்த சிறுமியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த காவல்துறையினர் நம்பிராஜன் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.