Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக் ஆகும் ‘கோமாளி’…. ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் தெரியுமா…?

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் கோமாளி திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார்.

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனான அஜித் நடிப்பில் உருவாகிவரும் ‘வலிமை’ திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இதையடுத்து அவர் மற்றொரு முன்னணி நடிகரான உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘ஆர்ட்டிக்கிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கவுள்ளார். இதே போல் அவர் அடுத்ததாக தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘கோமாளி’ திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

அந்த வகையில் தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான கோமாளி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை போனிகபூர் கைப்பற்றியுள்ளார். இதையடுத்து கோமாளி படத்தில் ஜெயம் ரவி நடித்திருந்த கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் நடிகர் அர்ஜுன் கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |