இணையதள டோக்கன் மூலம் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. எனவே மாவட்டத்தில் இதுவரையிலும் 3 லட்சத்து 55 ஆயிரத்து 22 நபர்கள் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். இதனிடையில் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் முகாம்களில் அதிக கூட்டத்தை தவிர்ப்பதற்காக https://bookmyvaccine.kumaricovidcare.in என்ற இணையதளத்தில் டோக்கன் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதல் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையத்திலும் தடுப்பூசி செலுத்துவதற்கு இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி நேற்று ஆன்லைன் டோக்கன் முறையில் 19 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று பொதுமக்கள் செலுத்தி கொண்டனர். நாகர்கோவிலில் மட்டும் அலோசியஸ் பள்ளியில் இணைத்தள டோக்கன் முறையிலும், இந்துக்கல்லூரியில் நேரடி டோக்கன் முறையிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. ஆகவே டோக்கன் பெறுவதற்காக மக்கள் அதிகாலை 4 மணியிலிருந்து நீண்ட வரிசையில் நின்று இணையதளத்தில் பதிவு செய்ய தொடங்கினர். இதனால் 3/4 மணி நேரத்திற்குள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான டோக்கன் முடிவடைந்துவிட்டது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் டோக்கன் சில மணி நேரம் நீடித்தது. இவ்வாறு ஆன்லைன் மூலம் பதிவு செய்து டோக்கன் பெறுபவர்கள் மட்டும் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்திச் சென்றனர்.
இதனால் இணையதள டோக்கன் மூலம் தடுப்பூசி செலுத்திய மையங்களில் அதிகம் கூட்டம் காணப்படவில்லை. இதேபோன்று நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் 200 டோஸ் தடுப்பூசி செலுத்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு நேரடியாக டோக்கன் பெற்று தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று காலையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட நீண்ட வரிசையில் காத்திருந்தும் அவர்களில் 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டன. இதனால் 100-க்கும் மேற்பட்டோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இவ்வாறு நேற்று ஒரே நாளில் 38 முகாம்களில் மொத்தம் 6 ஆயிரத்து 480 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் நேரடி டோக்கன் முறையில் தடுப்பூசி செலுத்துவதற்கான மையங்களை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.