Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதுனால வாழ்க்கையே வெறுத்துருச்சு… பெண் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குழந்தை இல்லாத விரக்தியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் வழக்கறிஞரான சக்கரவர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததால் ஜெயலட்சுமி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையை வெறுத்த ஜெயலட்சுமி தனது துப்பட்டாவால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஜெயலட்சுமியின் தாயார் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |