அம்பத்தூரில் இயங்கி வரும் பிரபல முருகன் இட்லி கடையின் உரிமத்தை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தின் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் முருகன் இட்லி கடை ஓன்று இயங்கி வருகிறது. இந்த கடை அப்பகுதியில் மிகவும் பிரபலமானது இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி கடையில் சாப்பிட்ட வழக்கறிஞர் ஒருவர் உணவில் புழு இருந்ததாக உணவு பாதுகாப்புத் துறை பாதுகாப்புத் துறைக்கு வாட்ஸ்அப் மூலம் அதனை புகைப்படம் எடுத்து புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஹோட்டலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு கடையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டனர். அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், தயார் செய்யப்பட்ட உணவுகள், சமைப்பதற்கு முன்புள்ள உணவுப் பொருட்கள் ஆகியவற்றில் சரியான சுத்தம் கடை பிடிக்கவில்லை என தெரிகின்றது. அதுமட்டுமில்லாமல் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளை முருகன் இட்லி கடை பின்பற்ற தவறியுள்ளது.
மேலும் உணவு தயாரிப்பவர்கள் தகுந்த மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை. இட்லி கடைக்கு லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ள போதிலும் கடை அதற்குரிய இடத்தில் வைக்கப்படாமல் வேறொரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என இப்படி பல்வேறு காரணங்களால் முருகன் இட்லி கடையின் உரிமத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டனர்.