திருட முயற்சி செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்குபட்டி பகுதியில் மாரிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.இந்நிலையில் மாரிமுத்து திருவேங்கடம் பகுதியிலுள்ள யோகா பயிற்சி மையத்திற்கு முன்பு நீண்ட நேரமாக நின்றுகொண்டு அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தார். இதனையடுத்து மாரிமுத்து திடீரென யோகா மையத்தின் கதவை உடைத்துக் கொண்டிருக்கும் போது திடீரென யோகா பயிற்சி மையத்தின் உரிமையாளர் அங்கு சென்று மாரிமுத்து கையும், களவுமாக பிடித்து விட்டார்.
இதனையடுத்து மாரிமுத்துவை யோகா பயிற்சி மையத்தின் உரிமையாளர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருட முயற்சி செய்த குற்றத்திற்காக மாரிமுத்துவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.