Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு போனது தப்பா…? அக்காள் கணவரின் செயல்… விசாரணையில் தெரியவந்த உண்மை…!!

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை அவரது அக்காள் கணவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் ஒரு வாலிபர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டிற்கு வந்த தனது மனைவியின் தங்கையை இந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இந்த சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவரது அக்காள் கணவர் தான் சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பின் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |