Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

10 ஆண்டுகள் ஆயிட்டு…. குளம் போல் காட்சியளித்தது…. சிரமப்பட்ட மக்கள்….!!

வாணியம்பாடியில் பெய்த கனமழை காரணமாக மண்ணாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆலங்காயம், நாராயணபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் பிற்பகலில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் எல்லையில் உள்ள நாராயணபுரம், அலசந்தாபுரம், திம்மாம்பேட்டை வழியாகச் மழைநீர் சென்று ஆவாரம் குப்பம் பாலாற்றில் கலக்கும் மண்ணாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. கடந்த ஒரு வருடமாக மழை இல்லாமல் வறட்சியாக காணப்பட்ட மண்ணாற்றில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.

இதேபோன்று ஜோலார்பேட்டை, சந்தைக்கோடியூர் போன்ற பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக கிராம பகுதிகளில் உள்ள மரம் மற்றும் மின்கம்பங்கள் விழுந்ததில் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் சிரமப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த உதவி மின் பொறியாளர் கோமதி தலைமையில், மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாய்ந்த மரங்கள் மற்றும் மின் கம்பங்களை சீர் செய்து மின்சாரம் வழங்கப்பட்டது. மேலும் திருப்பத்தூரில் பல்வேறு தெருக்களில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் தார் சாலைகள் போடாததால்  குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.

Categories

Tech |